கடற்றொழில் துறையில் முதலீடு செய்ய சீன முதலீட்டாளர்கள் விருப்பம்!

Date:

கடற்றொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனாவின் முதலீட்டாளர்கள் குழுவொன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தமது படகுகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் குறித்த முதலீட்டாளர்கள் குழு விரும்பம் வெளியிட்டுள்ளது.

தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாயின் கடற்றொழில்துறையில் பாரிய முதலீடுகளை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த முதலீட்டாளர்களின் திட்டவரைபை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் உரிய பதில்களை வழங்குவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....