மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் 7 மாதமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்

Date:

மகன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மருமகளை 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த முறைப்பாட்டின் பேரில் மாமனார் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயதான பெண்ணொருவர், தனது மாமனார் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்திருக்கிறார். அவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் முடிந்துள்ளது. ஒரே வீட்டில் கணவர் மற்றும் மாமனாருடன் இந்த இளம் பெண் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மாமனார் அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாமனாரின் தொல்லைகள் எல்லை மீறி சென்ற நிலையில், அது குறித்து இளம் பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதற்கிடையே, மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறிந்த இளம் பெண்ணின் கணவர், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் பாதிக்கப்பட்ட தனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறைப்பாடு தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறைப்பாடு அளித்த பெண்ணிடம் இருந்தும் பொலிஸ் வாக்குமூலத்தை பெற்று நீதிமன்றத்தில் அளித்துள்ளார்கள். இதற்கிடையே தன்னிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக தனது மருமகள் நாடகம் ஆடுவதாக மாமனார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...