திருமண நிகழ்வில் தீப்பரவல் – 100 பேர் பலி

Date:

ஈராக்கின் வடக்கு பகுதியில், திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ பரவலில் 100 பேர் வரை உயிரிழந்ததுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மணமகனும், மணமகளும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவர்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் வடக்கு நினிவே மாகாணத்தில் உள்ள அல்-ஹம்தானியா மாவட்டத்தில் நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படாத நிலையில் கேளிக்கை பட்டாசுகளின் ஊடாக தீப்பற்றியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....