81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

Date:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் – மேக்ஸ் ஓ’டவுட் ஆகியோர் ஆடினர். மேக்ஸ் ஓ’டவுட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 17 ரன்னில் வெளியேறினார்.

இந்நிலையில் விக்ரம்ஜித் சிங் உடன் பாஸ் டி லீடே ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டு விளையாடினார். சிறப்பாக விளையாடிய விக்ரம்ஜித் சிங் அரை சதம் விளாசினார். அரை சதம் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாஸ் டி லீடேயும் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 41 ஓவர் முடிவில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....