இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, ஸ்டீவ் ஸ்மித் 46 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 28 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 41.2 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, கே.எல்.ராகுல் 97 ஓட்டங்களையும், விராட் கோலி 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....