ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்

Date:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், ‘லியோ’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து ‘லியோ’ படக்குழுவினர் கேரளாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்களால் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “உங்கள் அன்பிற்கு நன்றி கேரள மக்களே. கூட்டத்தில் சிறிது காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்து நடந்த இரண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. உங்களை சந்திப்பதற்காக மீண்டும் வருவேன். அதுவரை இதே அன்புடன் ‘லியோ’வை ரசித்து கொண்டிருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....