உலகக் கோப்பை போட்டி- 156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

Date:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரை இறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்மூலம், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. இதில், டேவிட் மலான் 28 ரன்கள், ஜோ ரூட் 3 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள், ஜோஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் ஒரு ரன், மொயீன் அலி 15 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், அதில் ரஷித் 2 ரன்கள், மார்க் வுட் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

இதில், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 33.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், 157 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை களமிறங்க உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....