கைதி 2-வில் விஜய் கேமியோ… டில்லி உடன் இணைகிறாரா லியோ தாஸ்? – லோகேஷ் கனகராஜ் தந்த மாஸ் அப்டேட்

Date:

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான். ராஜு முருகன் இயக்கியுள்ள இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல்வேறு அப்டேட்டுகளையும் வாரி வழங்கினார். லியோ பட வெளியீட்டுக்கு பின்னர் அவர் கலந்துகொண்ட முதல் விழா இது என்பதால், முதலில் லியோ படம் குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று தான் லியோ பட சக்சஸ் மீட் பற்றிய அப்டேட். இதுகுறித்து பேசிய லோகேஷ், அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

அடுத்ததாக லியோ படத்துக்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸ் பற்றி பேசிய லோகேஷ், தான் திரையரங்குகளுக்கு சென்று பார்த்தவரை படத்துக்கு ஆடியன்ஸ் அமோக வரவேற்பு கொடுத்து வருவதாகவும், சிலர் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாக கூறுகிறார்கள் அந்த விமர்சனத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். படத்தின் கலெக்‌ஷன் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என ஸ்மார்ட்டாக பதிலளித்தார் லோகி.

லியோ படம் பார்த்து விஜய் என்ன சொன்னார் என கேட்டதற்கு, விஜய் ரொம்ப ஹாப்பியாக இருக்கிறார் என்றும், நான் தியேட்டர் விசிட்டின் போது காயமடைந்ததை அறிந்து போன் பண்ணி விசாரித்தார். இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை என கூறினார். அதுமட்டுமின்றி லியோ தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பண்ணிய கதை என்றும் அதில் தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் முடிந்தவரை அப்படியே படத்தை எடுத்துள்ளதாக கூறினார்.

இறுதியாக கைதி 2 படம் பற்றி பேசிய லோகேஷ். இது நிச்சயம் ஸ்டிராங் ஆன படமாக இருக்கும் என கூறினார். மேலும் அதில் எல்லாருடைய பங்களிப்பும் கைதி 2-வில் ஸ்டிராங்கா இருக்கும் என்றும் லோகேஷ் ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். இதனால் ஏற்கனவே எல்சியுவில் உள்ள ரோலெக்ஸ் சூர்யா, விக்ரம் கமல், லியோ தாஸ் விஜய் ஆகியோரின் கேமியோ இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைதி 2 படத்துக்கு அடுத்ததாக சூர்யாவை வைத்து தான் ரோலெக்ஸ் படம் பண்ண உள்ளதாகவும் லோகேஷ் அந்த விழாவில் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....