பதும் நிசங்க இரட்டை சதம்: ஆப்கானிஸ்தான் வெற்றிபெற 382 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

Date:

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.

அவிஷ்க 88 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு நிசங்க, சமரவிக்ரம ஜோடி 120 ரன்களை சேர்த்தது. சமர விக்ரம 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய நிசங்க இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....