ஜாம் ஜாம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அபிஷேக் ராஜா

Date:

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு, பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றன.

“ஓ மை கடவுளே”, “பேச்சுலர்” என்ற இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்தது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம். இந்த படங்களை தொடர்ந்து லவ் டிரையாலஜி சார்ந்த காதல் கதையாக ‘ஜாம் ஜாம்’ படத்தை அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் மூலம் பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். வழக்கமான ரொமாண்டிக் காமெடி எண்டர்டெயினர் படமாக இது நிச்சயம் இருக்காது என்கிறார் இயக்குநர் அபிஷேக் ராஜா. மாறாக, அதிகமான எண்டர்டெயின்மெண்ட்டோடு ரொமான்ஸ் மற்றும் த்ரிலிங்கான தருணங்களும் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்.

“ஜாம் ஜாம்” படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். “முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்” என்ற மலையாள படத்தை இயக்கிய அபினவ் சுந்தர் நாயக் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார்.

நவதேவி ராஜ்குமார் ஆடை வடிவமைப்பையும், அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஒலிப்பதிவையும் கவனிக்கிறார்கள். இப்படத்திற்கு பிரதீப் ராஜ் கலை இயக்குநராக உள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....