உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நாக் அவுட் சுற்றுக்கு நுழைந்த இந்திய ஆடவர், பெண்கள் அணி

Date:

தென் கொரியாவின் பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளில் இந்திய அணி இன்று அதிரடியாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதனால், 3-வது சுற்று (ரவுண்ட் 16) ஆட்டத்திற்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இதில், வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறும்போது, பாரீஸ் நகரில் நடைபெறும் 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.

இதன்படி, முதலில் இந்திய மகளிர் அணியானது இத்தாலியை இன்று எதிர்கொண்டது. இதில், இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 3-0 என்ற செட் கணக்கில் நிகோலெட்டா ஸ்டெபனோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 20 நிமிடங்களில் போட்டி நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில், உலக தர வரிசையில் 36-வது இடத்தில் உள்ள, இந்தியாவின் முதல்தர வீராங்கனையான மணிகா பத்ரா, 3-0 என்ற செட் கணக்கில் கிரோஜியா பிக்கோலின் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 23 நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது.

3-வது போட்டியில் இந்தியாவின் ஆய்ஹிகா முகர்ஜி, 3-1 என்ற செட் கணக்கில் கயியா மொன்பார்டினியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனால், இந்தியா 3-0 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியாவின் அடுத்த சவாலானது சீன தைபே அணிக்கு எதிராக இருக்கும்.

இதன்பின்னர் இன்று நடந்த ஆடவர் குழு போட்டியில் இந்திய அணியானது, கஜகஸ்தான் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இதனால், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் ஒரு சுற்று போட்டியில் வெற்றி பெற வேண்டி உள்ளது. அதில் கிடைக்கும் வெற்றியை அடுத்தே பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....