டோனியின் கடைசி தொடர் 2024 ஐ.பி.எல். – அவரது நண்பர் என்ன சொன்னாரு தெரியுமா?

Date:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி தற்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த நிலையில், இம்மாத இறுதியில் துவங்கும் 2024 ஐ.பி.எல். தொடருடன் எம்.எஸ். டோனி ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

ஐ.பி.எல். தொடரில் வெற்றிகர கேப்டன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள எம்.எஸ். டோனி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறார். இவரை தவிர ரோகித் சர்மா ஐந்து முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றிருக்கிறார். ஓய்வு குறித்து எம்.எஸ். டோனி இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை.

இந்நிலையில், எம்.எஸ். டோனியின் நெருங்கிய நண்பர் பரம்ஜித் சிங் அவர் எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இது அவரின் (டோனியின்) கடைசி சீசனாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் இன்னமும் நல்ல உடற்தகுதியுடனேயே இருக்கிறார். அவர் இன்னும் ஒற்றிரண்டு சீசன்களிலாவது விளையாடுவார் என்றே நினைக்கிறேன். அவர் நிச்சயம் இன்னும் ஒரு சீசனில் விளையாடுவார். இதற்கு காரணம் அவரின் உடற்தகுதி தான்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக எம்.எஸ். டோனி நெட்ஸ்-இல் வலைபயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் பயிற்சியின் போது டோனி பயன்படுத்திய பேட்-இல் பரம்ஜித்-க்கு சொந்தமான பிரைம் ஸ்போர்ட்ஸ் கடையின் ஸ்டிக்கர் இடம்பெற்று இருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....