இறுதிப் பந்தில் இலங்கை அணி திரில் வெற்றி!

Date:

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களுடன் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில், Rishad Hossain , Taskin Ahmed மற்றும் Shoriful Islam ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Jaker Ali 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மஹ்மதுல்லா 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ், தசுன் சானக்க மற்றும் பினுர பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....