பெண்கள் பிரீமியர் லீக்: மந்தனாவின் அதிரடியால் ஆர்சிபி அணிக்கு 3-வது வெற்றி

Date:

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். எலிஸ் பெர்ரியும் அரைசதம் (58 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார்.

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி களத்தில் நின்றது வரை அவர்களுக்கு நம்பிக்கை காணப்பட்டது. ஹீலி 55 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு (8 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி. வாரியர்ஸ் அணியின் 3-வது தோல்வி இதுவாகும்.

இத்துடன் பெங்களூரு சுற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே தொடக்க லீக்கில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....