‘பேட்மேன்-2’ படத்தை 2026-ல் வெளியிட திட்டம்

Date:

‘தி பேட்மேன்’ ஆங்கில படம் 2022-ல் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக ராபர்ட் பாட்டின்சன், நடிகை

ஜோ க்ராவிட்ஸ் சிறப்பாக நடித்ததன் மூலம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. மேலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கியிருந்தார். பேட்மேன் உலகளவில் 772 மில்லியன் டாலர் வசூலித்தது.

‘பேட்மேன்’ படம் உயர் வர்க்கத்தினரை குறி வைத்து கொலை செய்யும் ஒரு கொலை கும்பலை கண்டுபிடித்து அழிக்கும் கதை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்மேன் -2 படத்தில் ராபர்ட் பாட்டின்சன் மீண்டும் நடிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து படம் தயாரிப்பு பணிகள் தொடங்கின. பேட்மேன்- 2 படத்தில் கதாநாயகனாக மீண்டும் ராபர்ட் பாட்டின்சன் நடிக்க தொடங்கினார். மேலும், பேட்மேன் -2 வருகிற 2025 அக்டோபர் 3-ல் வெளியிடவும் திட்டமிடப்பட்டது.

2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது ‘தி பேட்மேன் – 2’ வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....