ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க இதை செய்யுங்கள்- பாண்ட்யாவுக்கு லாரா அட்வைஸ்

Date:

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் போட வந்தபோது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் சேர்ந்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.

 

இந்நிலையில் இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்கு இந்தியாவுக்காக பாண்ட்யா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார்.

இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு:-

கெவின் பீட்டர்சன்: கேப்டனாக இருக்கும் பாண்ட்யா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை.

இயன் பிஷப்: பாண்டியா இங்கே ரசிகர்களை வெல்ல முடியுமா? அவர்களின் மனதை மீண்டும் வெல்வதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்?

பிரையன் லாரா: இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை அவர்கள் இங்கே விளையாடுவார்கள் என்று பாண்ட்யாவை கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இதற்கு கெவின் பீட்டர்சன் மற்றும் இயன் பிஷப் இருவரும் சிரித்தார்கள்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....