யாஷ் தயாளை குப்பையுடன் ஒப்பிட்ட முரளி கார்த்திக்.. வலுக்கும் கண்டனம்

Date:

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் 6-வது லீக் போட்டியில் பஞ்சாப் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய யாஷ் தயாள் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் யாரோ ஒருவரின் குப்பை யாரோ ஒருவருக்கு புதையலாகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழக வீரருமான முரளி கார்த்திக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வருடம் குஜராத்துக்காக விளையாடிய யாஷ் தயாள் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிடம் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

அதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை தற்போது பெங்களூரு வாங்கியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:-

குஜராத் அணியில் குப்பையை போல் செயல்பட்ட யாஷ் தயாள் பெங்களூரு அணியில் புதையலை போல் செயல்படுவதாக வர்ணித்த முரளி கார்த்திகை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்காக நீங்கள் எந்தளவுக்கு புதையலை போல் செயல்பட்டீர்கள்? என்றும் யுவராஜ் சிங்கிடம் 6 சிக்சர்கள் கொடுத்தாலும் கடைசியில் 600 டெஸ்ட் விக்கெட்டுகள் ஸ்டுவர்ட் பிராட் எடுத்தவர். அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா என்றும் ரசிகர்கள் அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு இளம் வீரரை குறைத்து மதிப்பிட்டு அவமானப்படுத்தும் பேசிய முரளி கார்த்திக் ஒன்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....