டெல்லி அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

Date:

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.

அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....