இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான கேப்டன் டோனி தான்- கம்பீர் புகழாரம்

Date:

ஐபிஎல் 2024 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. ஆனால் சேப்பாக்கத்துக்கு வெளியே விளையாடிய 2 போட்டிகளில் சென்னை தோல்வியை தழுவியுள்ளது.

அதே சமயம் கொல்கத்தா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே இன்றைக்கு சென்னை அணிக்கு கொல்கத்தா கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போட்டி தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனது சமூக வலைத்தளங்களில் கம்பீர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை கம்பிர் புகழ்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், “போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே சமயம் நண்பர்கள் மத்தியில் பரஸ்பர மரியாதை எல்லாம் இருக்கும். ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். எனவே அவரிடம் நீங்கள் கேட்டாலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்பதையே சொல்வார்.

எம்.எஸ். டோனி இந்தியாவுக்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன். குறிப்பாக 3 ஐசிசி கோப்பைகளை வென்று அவர் தொட்டுள்ள உயரத்தை யாராலும் தொட முடியும் என்று நான் கருதவில்லை. எனவே ஐபிஎல் தொடரில் டோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏனென்றால் டோனி நுணுக்கமான மைண்ட் செட்டை கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். ஸ்பின்னர்களை எப்படி கட்டுப்படுத்துவது? ஃபீல்டை எப்படி செட்டிங் செய்வது போன்றவற்றை நன்றாக தெரிந்த அவர் எப்போதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார். 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் அவர் களத்தில் இருக்கும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் களத்தில் இருந்தால் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.

அதே சமயம் சென்னை அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பவுலிங் திட்டம் என்னிடம் இருப்பதை நான் அறிவேன். களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய டோனியை விட நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை சென்னையை நீங்கள் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும்” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....