ரோகித் சதம் வீண்- 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை பத்திரனா பிரித்தார். இஷான் கிஷன் 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் அந்த ஓவரிலேயே 0 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து ரோகித் – திலக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் 30 பந்தில் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடி திலக் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13, ஷெப்பர்ட் 1 என வெளியேறினர். தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....