கேண்டிடேட் செஸ் போட்டி: குகேஷ் – பிரக்ஞானந்தா மோதிய 9-வது சுற்று ஆட்டம் டிரா

Date:

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 9-வது சுற்று நேற்று நடந்தது.

சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ்- பிரக்ஞானந்தா இந்த சுற்றில் மோதினார்கள். இதில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.41-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது.

இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தார். இந்த டிரா மூலம் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி 9- வது சுற்றில் வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை 36-வது நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார். 2-வது முறையாக விதித் குஜராத்தி அவரை தோற்கடித்துள்ளார்.

இயன் நெபோம்னியாச்சி (ரஷியா)-அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) மற்றும் பேபியானோ (அமெரிக்கா)-நிஜத் அப்சோவ் (அஜர்பைஜான்) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

9 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். விதித் குஜாராத்தி 4.5 புள்ளிகளுடன் 4 முதல் 6-வது இடத்தில் உள்ளார்.

பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

9-வது ரவுண்டு முடிவில் ஹம்பி 4 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், வைஷாலி 2.5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....