டோனி நீண்ட நேரம் பேட்டிங் ஆடுவதை பார்க்க அனைவரும் விரும்புகிறார்கள் ஆனால்… – ஸ்டீபன் பிளெமிங்

Date:

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்தது.

இந்த சீசனில் மீண்டும் பினிஷராக உருவெடுத்துள்ளார் எம்.எஸ் டோனி. இதுவரை டெல்லி, மும்பை, லக்னோவுக்கு எதிராக 37* (16), 20* (4), 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக விளையாடி இருக்கிறார்

சிஎஸ்கே அணியின் நலனுக்காக தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசியுள்ளார். அதில், “டோனியின் பேட்டிங் உத்வேகத்தை கொடுக்கிறதல்லவா? இந்த வருடம் வலைப்பயிற்சியில் கூட அவருடைய பேட்டிங் மிகவும் துல்லியமாக இருக்கிறது. எனவே அவருடைய ஆட்டத்தை பார்த்து எங்கள் அணி ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே நாங்கள் அவருடைய உச்சகட்ட திறமையை பார்த்துள்ளோம். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் அவருடைய முழங்காலில் பிரச்சனை இருக்கிறது”

அதிலிருந்து மீண்டு வரும் அவரால் குறிப்பிட்ட சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள முடியும். இங்கே அனைவரும் எங்களைப் போலவே டோனி அதிக நேரம் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புகின்றனர். இருப்பினும் நாங்கள் அவரை தொடர் முழுவதும் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம். அதற்கு அவர் 2 – 3 ஓவர்கள் விளையாடுவதே சரியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது.

அவர் பேட்டிங் செய்ய வரும் போது அற்புதமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் அனைவரையும் மகிழ்விக்கிறார். அந்த வகையில் டோனி சாதித்துள்ள விஷயங்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தியாவுக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் செய்துள்ளதை பார்த்து எங்களுக்கு ஆச்சரியமில்லை. எங்களுடைய அணியின் இதயத்துடிப்பாகவும் ஒரு அங்கமாகவும் அவர் இருப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....