ஐ.பி.எல். 2024 – பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்.. 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி

Date:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா 16 ரன்களிலும், டேவிட் வார்னர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய அபிஷேக் பொவெல் 22 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், கேப்டன் ரிஷப் பந்த் நிதானமா ஆடி 44 ரன்களை குவித்தார். இவரும் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நசராஜன் 4 விக்கெட்டுகளையும், மயன்க் மார்கண்டே மற்றும் நிதிஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....