கடைசி பந்தில் விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்- 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத்

Date:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. ராஜஸ்தான் முதல் ஓவரில் 1 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட்லர், சாம்சன் 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இதனையடுத்து ஜெய்ஸ்வால் – ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னில் நட்ராஜன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் ஜூரல் (1) விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளை ரோமன் பவல் டாட் பந்துகளாக மாற்றினார். கடைசி பந்தை பவல் சிக்சராக மாற்ற கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5-வது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....