“எலெக்ஷன்” படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

Date:

‘உறியடி’, ‘பைட் கிளப்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலெக்ஷன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ‘சேத்துமான்’ பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார்.

‘அயோதி’ புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ரீல் குட் பிலிம்ஸ்’ ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நேரத்தில் ‘எலெக்ஷன்’ என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இந்த படத்தின் முதல் ‘சிங்கிள்’ கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில், எலெக்ஷன் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

மன்னவன் என்று துவங்கும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....