சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை பந்தாடிய அமெரிக்கா – 5 ரன்களில் வெற்றி பெற்று அசத்தல்

Date:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களையும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.

இதையடுத்து 160 என்ற இலக்கை துரத்திய அமெரிக்கா அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்கா அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அவுட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.

19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலககக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....