ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானை வீடியோ காலில் பாராட்டிய தலிபான் அமைச்சர்

Date:

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

அபூட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், “அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை

பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்’ என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ காலில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....