நான் சில தவறுகள் செய்தது உண்மைதான்- சமந்தா

Date:

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா ஒருபுறம் நாக சைதன்யாவுடன் விவாகரத்து, மற்றொரு புறம் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணங்களால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு ரசிகர் சமந்தாவிடம் இப்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது ”இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்கு தெரியாமல் செய்தவை. அதன் பிறகு அவற்றை விளம்பரம் செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டேன்.

இப்போது எதை செய்கிறேனோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுகிறேன்” என்றார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....