கோபா அமெரிக்கா கால்பந்து.. இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

Date:

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

மறுபுறம் கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது. எனினும், முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் மற்றொரு கோல் அடிக்கும் முயறச்சியில் அர்ஜென்டினா அணியும், பதில் கோல் அடிக்க கனடா அணி வீரர்களும் முயற்சித்தனர்.

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது. கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி அடித்த முதல் கோல் அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.

போட்டி முடிவில் கனடா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய கனடா அணி இந்த தொடரில் தனது கடைசி போட்டியை ஜூலை 14 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடியும்.

நாளை நடைபெற இருக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். தோல்வியை தழுவும் அணி ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ளும்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....