மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு

Date:

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கின. மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவையும் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளன.

விமான சேவைகள் பாதிப்பு

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக டில்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் இதே நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....