மீண்டும் பியூமியிடம் வாக்குமூலம் பதிவு!

Date:

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது..

அவருக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று 04 ஆம் திகதி  சுமார் 9 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 5ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் BMW ரக கார் பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் இருந்து வாங்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி, BMW கார் வாங்குவதற்கு பியூமி ஹன்சமாலி எப்படி பணம் சம்பாதித்தார் என்பது குறித்தும், அவர் விற்பனை செய்யும் அழகுசாதன பொருட்கள் ஊடாக அதிக அளவு பணம் பெற்றது குறித்தும் சட்டவிரோத சொத்துகள் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.

அந்த விசாரணை தொடர்பான வாக்குமூலங்களை வழங்குவதற்காக பியூமி ஹன்சமாலி நேற்று காலை 9 மணியளவில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.

சுமார் 9 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....