ஓடிடியில் தங்கலான் படம் இன்னும் ரிலீஸ் ஆகாதது ஏன்..?

Date:

தி கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கலான் ரிலீசான நிலையில் ஓடிடியில் வெளியாக தாமதம் ஆகி வருவதற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் முன்னணி கேரக்டரில் நடித்து ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியான தங்கலான் திரைப்படம் ஓடிடியில் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் கருத்துகள் கவனம் பெற்று வருகின்றன. விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூப்பர் ஹிட்டானது.

விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த மாதம் 5 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் நேற்று முன்தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

தி கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கலான் தியேட்டர்களில் வெளிவந்த நிலையில் ஓடிடியில் வெளியாக தாமதம் ஆகி வருவதற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பின்வரும் கருத்துக்களை கூறியுள்ளனர்.

ஓடிடி தளங்கள் எதிர்பார்க்கும் விதிகளை மீறும் வகையில் தங்கலான் படத்தில் காட்சி அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும்படி காட்சிகள் இருந்தால், பின்னால் பிரச்னை ஏற்படும் என்பதால் அதுபோன்ற காட்சிகளை நீக்குவது நல்லது என ஓடிடி நிறுவனம் கருதுவதாக தெரிகிறது.

தங்கலான் படத்தில் மாட்டு இறைச்சி சாப்பிடும் காட்சிகள் மற்றும் எருமை மாட்டை அடித்து சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த காரணங்களுக்காக தங்கலான் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுவதில் தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....