இ.தொ.காவின் பிரச்சார செயலாளராக கணபதி கனகராஜ் நியமனம்!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு கூட்டம் இ.தொ.காவின் தலைமை செயலகமான சௌமியபவனில் நேற்று இடம்பெற்றது.

இவ்வுயர்மட்ட குழு கூட்டத்தின் போது நடைபெறவுள்ள போது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்திலும் ஏனைய மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்திலும் இ.தொ.கா போட்டியிட தீர்மானம் எட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானால் இ.தொ.காவின் பிரச்சார செயலாளராக கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது தேர்தலில் நுவரெலியா மற்றும் ஏனைய மாவட்டங்களில் பிரச்சாரத்தில் வியூகம் வகுத்தல் தேர்தல் பிரச்சாரத்தின் நடைமுறைகளை ஆராய்தல் போன்ற விடயங்களுக்கான முழு பொறுப்பும் கணபதி கனகராஜ்க்கு வழங்கப்பட்டுள்ளது .

பொது தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன்,சக்திவேல் ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில், கணபதி கனகராஜ்க்கு யானை சின்னத்தில் தேசிய பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....