130 வருடப் பழமை வாய்ந்த நுவரெலியா நகரில் உள்ள அஞ்சல் கட்டிடம், அஞ்சல் திணைக்களத்தினால் மாத்திரம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அந்த கட்டிடத்தைத் தனியார் விருந்தகம் ஒன்றாகப் பயன்படுத்துவதற்குக் கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலதரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த கட்டிடத்தைத் தொடர்ந்தும் அஞ்சல் திணைக்களமே பயன்படுத்தும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.




