இணையவழி மோசடியில் ஈடுபட்ட மேலும் 20 சீன பிரஜைகள் கைது!

Date:

இணையவழி மோசடிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை வடக்கு காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

விசா இன்றி 20 இலட்சம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் அவர்கள் விடுதியில் தங்கியிருந்தமை விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.

அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கைபேசிகள், 332 USB கேபிள்கள் மற்றும் 17 ரவுட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் 20 இலட்சம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் பாணந்துறை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நாவல பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு முன்னர் ஹங்வெல்ல பகுதியிலுள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றில் தங்கியிருந்த 30 சீன பிரஜைகளும், 4 இந்தியர்களும் 6 தாய்லாந்து பிரஜைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....