மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை!

Date:

2012 ஆம் ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்தபோது அரசாங்கத்திற்குச் சொந்தமான பணத்தைக் கிரேக்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் தலா ரூ. 1 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....