டி20 உலகக் கிண்ணம் – இலங்கை மகளிர் அணி வெளியேற்றம்!

Date:

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஷார்ஜாவில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சமரி அத்தப்பத்து 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 116 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியின் சார்பில் ஜோர்ஜியா ப்ளிம்மர் 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய இலங்கை மகளிர் அணி எவ்வித வெற்றிகளையும் பதிவுசெய்யாத நிலையில் மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....