பாக்.,கில் மீண்டும் கட்டப்படும் இந்து கோயில்

Date:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், 64 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்து கோயில் கட்டப்பட உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை மேற்பார்வையிடும் அமைப்பு சார்பில் ராவி நதியின் மேற்குக் கரை நரோவல் நகரத்தில் 1960ல்

பாவோலி சாஹிப் கோவில் கட்ட தொடங்கியது. ஆனால் பணிகள் முடிக்கவில்லை. அந்த கோவில் முற்றிலும் அழிந்து போனது.

தற்போது, ​​நரோவல் மாவட்டத்தில் இந்துக் கோவில் எதுவும் இல்லை, இதனால் இந்து சமூகம் தங்கள் மதச் சடங்குகளை செய்வதற்கு

சியால்கோட் மற்றும் லாகூரில் உள்ள கோவில்களுக்குச் செல்லும்படி அரசு நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.

இதுகுறித்து பாக்., தரம்ஸ்தான் கமிட்டியின் முன்னாள் தலைவர் ரத்தன் லால் ஆர்யா கூறுகையில்,

பாவோலி சாஹிப் கோவிலின் மீதான அரசு கட்டுப்பாட்டினால் அது செயல்படாமல் போய்விட்டது. அதன் பிறகு 45 இந்து கோயில்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் பின்னாளில் அழிந்துபோனது.

நரோவலில் 1,453 பேர் இந்து சமூகத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் வழிபாட்டிற்கு பிரத்யேக இடம் இல்லாதது, அவர்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது.

பாகிஸ்தான் அரசு புள்ளிவிபரப்படி, 75 லட்சம் இந்து மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 20 ஆண்டாக, அரசுக்கு கோரிக்கை வைத்து கொண்டே இருந்தோம். அதன் பயனாக தற்போது 64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இந்து சமூகத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு ரத்தன் லால் ஆர்யா கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....