2025ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் மெகா ஏலமானது இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்நநிலையில் சவுதி அரேபியாவில் மெகா ஏலத்தை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் குழு தற்போது சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




