எல்லை ரோந்து தொடர்பாக ஒப்பந்தம்

Date:

இந்தியா – சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தணியவும், எல்லையில் படைகளை குறைக்கவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் திகதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, அக்டோபர் 23ம் திகதி ரஷ்யா செல்கிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது

அதனை தொடர்ந்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும், பல்வேறு இடங்களில் சுமூக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஜூலை மாதத்தில் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர், கடந்த செப்டம்பர் மாத கடைசியில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் லடாக்கின் கிழக்கு பகுதி எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். கடந்த சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, லடாக்கின் கிழக்கு பகுதி எல்லையில், ரோந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு குறித்து, இது வரை தகவல் இல்லை.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”இந்த ஒப்பந்தம் மூலம், 2020 மே மாதத்துக்கு முன் எந்த எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் ரோந்து சென்றார்களோ, அதே நிலை இப்போது மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்புக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது, எல்லையில் அமைதி நிலவுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....