IMF உடன்படிக்கையைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் – சஜித்

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கப்பெறுமானால், நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கத்திற்குச் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மீளாய்வுக்குட்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை தமது கடனை 2032ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் செலுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியம் வாய்ப்பளித்திருந்தது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த முடியும் என தெரிவித்து, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.

இதனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சலுகைக் காலத்தில் 4 வருடங்கள் இல்லாமல் போயின.

எனினும், அந்த காலப்பகுதிக்குள் மீண்டும் கடனை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதானால், நாட்டின் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான எந்தவொரு முயற்சியையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எனவே தமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்தி, அதன் நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....