எதிர்ப்பு போதகர் ஜெரோமின் வருகைக்கு

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (05) நாவலப்பிட்டி மீப்பிட்டிய பிரதேசத்திற்கு வந்ததையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தியதன் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது.

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான புனர்வாழ்வு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் இடமொன்றுக்கு, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வருகையைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

குழந்தைகளுக்கான புனர்வாழ்வு நிலையமொனறைக் கட்டித் தருவதாகக் கூறி, இந்த இடத்தில் மத வழிபாட்டுத் தலத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பின்னர், கிராம மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....