எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு

Date:

ஒடிசா மாநிலத்தின் பத்ரக் அருகே இன்று சென்று கொண்டிருந்த புரி-ஆனந்த் விகார் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று காலை 9 மணியிலிருந்து 9.30 மணிக்குள் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் பத்ரக்கை கடந்து சென்றபோது நடந்திருக்கிறது.

சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார், உடன் நாங்களும் விரைந்து சென்று பயணிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினோம். நல்வாய்ப்பாக, யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

ரயில்வே கார்டு மகேந்திரா பெஹரா கூறுகையில், ‘நான் சிக்னல் மாற்றும் போது, பத்ரக் மற்றும் பவுத்புர் ரயில்வே நிலையத்திற்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒருவன் துப்பாக்கியால், ரயில் மீது இரு முறை சுட்டான். நான் உடனடியாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்தேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு பெஹரா கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....