சிறுமியை கற்பழித்த சிறுவனுக்கு 10 ஆண்டு சிறை

Date:

டெல்லியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 4-ம் திகதி 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று, கற்பழித்தான். இதனையடுத்து சிறுமியை கடத்தி கற்பழித்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டு டெல்லி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அண்மையில் முடிவுக்கு வந்தது. இதில் சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. சிறுவனை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, போக்சோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் அவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், கடத்தல் குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....