வென்னப்புவ – கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஆண் ஒருவரும் (60-65) பெண் ஒருவருமே துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




