சிறுவர்களுக்கு எதற்கு பேஸ்புக், இன்ஸ்டா?

Date:

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்’ என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்தார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சமூகவலைதளத்தில் கணக்கு இல்லாதவர்களை காண்பதே அரிது. இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்’ என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டம் 12 மாதங்களுக்கு பிறகு நடைமுறைக்கு வரும். இந்த ஆண்டு பார்லிமென்டில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் அதிக நேரத்தை வீணாக செலவு செய்கின்றனர். பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கு விதிவிலக்குகள் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முன்மொழிந்தது. இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது.

பல நாடுகள் ஏற்கனவே கடுமையான சட்டத்தின் மூலம் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. இதனால், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதளங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....