உக்ரைனில் இணையதள வசதி கிடைத்து ஆபாச படம் பார்க்கும் வடகொரிய வீரர்கள்

Date:

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. இந்நிலையில், போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் இருதரப்பிலும் அமைதி பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

உக்ரைனுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷியா திட்டமிட்டு உள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டாக கூறினார். இந்நிலையில், ஏ.கே.-12 ரக துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை ஏந்திய வடகொரிய வீரர்கள், உக்ரைனை ஒட்டிய எல்லை பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ரஷிய போரில் அந்நாட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ரஷியாவின் கிழக்கே வெவ்வேறு 5 தலங்களில் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை உக்ரைனின் பாதுகாப்பு உளவு பிரிவு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், வடகொரிய வீரர்களுக்கு தடையற்ற இணையதள வசதி கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விசயம். போருக்காக வந்த இடத்தில், இதனை பயன்படுத்தி கொண்ட வீரர்கள், இணையதளம் வழியே ஆபாச படங்களை பார்த்து வருகின்றனர் என தி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கின்றது.

எனினும், உக்ரைனுக்கு கிம் ஜாங் அன் அனுப்பி வைத்த வடகொரிய வீரர்களிடையே இந்த இணையதள பயன்பாடு கிடைத்தது பற்றிய விவரங்கள் எப்படி வெளிவந்தன என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள வடகொரிய வீரர்கள் முதன்முறையாக கடந்த புதன்கிழமை உக்ரைன் படையுடன் மோதலில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....