மாணவர் ஒருவரைப் பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதற்காக கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராகமை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
150, 000 ரூபாவை கையூட்டலாக பெற்ற சம்பவம் தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.




