அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம்

Date:

அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும்,” என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு நிருபர்களிடம் அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: 200 ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் சுயாட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது. மக்கள் அமைதியாக ஓட்டளித்து தங்கள் தலைவரை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும். அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டிரம்ப்பை நேற்று அழைத்து பாராட்டு தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடப்பதை, அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவேன் என அவரிடம் தெரிவித்து உள்ளேன். மக்களும் அதனை விரும்புகின்றனர்.

கமலா ஹாரிஸ் எனது கூட்டாளி. பொது சேவகர். அவர் தனது முழுமனதுடன் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாடு பற்றிய கேள்விகள் இனி வராது என நம்புகிறேன். அந்த முறை நேர்மையானது. நியாயமானது. வெளிப்படையானது என்பதை நம்பலாம். ஜன.,20ல் அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும். இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....