சிட்னி விமான நிலையத்தில் விமான என்ஜின் வெடித்ததில் தீ விபத்து

Date:

சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) புறப்பட்டது. புறப்பட்ட சில மணிநேரத்தில் விமானத்தின் வலது என்ஜின் வெடித்ததால் தீ பற்றியது. இதனால் விமானம் 3வது ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைத்தனர்.

இந்த விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு தனியார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தால் விமான நிலைய பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விமான பயணி ஜார்ஜினா லூயிஸ் கூறுகையில், “விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது. பிறகு வலதுப்புற என்ஜினில் சிக்கல் ஏற்பட்டதாக விமானி விளக்கினார். இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....